ஆசையாக காதல் திருமணம் செய்த இளம் ஜோடி - மூன்றே மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!

Relationship Crime Murder
By Vidhya Senthil Nov 24, 2024 08:34 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 காதல் தம்பதி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் உதய பிரகாஷ் .இவர் நாகையைச் சேர்ந்த உதய பிரகாஷ் என்பவரைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஹேமா குடும்பத்தினர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

tragic decision taken by a young love couple

இதனையடுத்து உதய பிரகாஷ் மற்றும் ஹேமா ஆகிய இருவரும் உதய பிரகாஷின் சித்தி ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையிலிருந்து ஹேமா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உதய பிரகாஷ் அறையின் ஜன்னலில் எட்டி பார்த்துள்ளார்.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்!

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்!

அப்போது வீட்டு ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதய பிரகாஷ், வீட்டின் எதிரே உள்ள மரத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர் .

 தற்கொலை

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைபூண்டி காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tragic decision taken by a young love couple

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்குத் தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.