வீட்டில் கேட்ட அலறல் சத்தம் ..பெண் காவலரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கணவர் - பின்னணி என்ன?

Kerala Crime Murder
By Vidhya Senthil Nov 22, 2024 01:52 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 கண்ணூரில் பெண் காவலர் அதிகாரியை அவரது கணவனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பெண் காவலர் 

கேரள மாநிலம் சந்தேரா காவல் நிலையத்தில் திவ்யஸ்ரீ என்பவர்( வயது 34 )சிவில் சப்ளை காவல் அதிகாரியாக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கணவர் ராஜேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

Kerala woman police officer hacked to death by her husband

அவ்வப்போது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து இந்த தம்பதியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் திவ்யஸ்ரீக்கு சபரிமலையில் பணி ஒதுக்கப்பட்டது.

காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை நண்பர்கள்- அறையில் காதலன் செய்த கொடூர சம்பவம்!

காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை நண்பர்கள்- அறையில் காதலன் செய்த கொடூர சம்பவம்!

இதனால் பள்ளியேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று, சபரிமலை செல்வதற்கான தயாராகிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திவ்யஸ்ரீயை சரமாரியாக வெட்டியுள்ளார்.

வெட்டி  கொலை

இதைத் தடுக்க முயன்ற அவரது தந்தை வாசுவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அங்கிருந்து ராஜேஷ் தப்பி ஓடி விட்டார்.

Kerala woman police officer hacked to death by her husband

ராஜேஷை விடாமல் துரத்திய கேரள காவல் துறை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும் அரிவாள் வெட்டில் பெண் காவலர் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை வாசுவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறை ராஜேஷிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.