ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை.. துடித்துடித்து இறந்த கொடூரம்!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீராங்கனை
கோயம்புத்தூர் மாவட்டம் சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராபின் டென்னிஸ் . இவரது மகள் எலினா லாரெட் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், இவர் விளையாட்டில் ஆர்வம் கொண்டமையால் கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி மத்தியப் பிரதேசம் குவாலியரில்பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாணவி எலினா லாரெட் மற்றும் சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார். அதன்படி, போட்டியை முடித்துவிட்டுக் கடந்த சனிக்கிழமை ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மாணவி எலினா லாரெட் மற்றும் சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ,வாந்தி ,மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழந்த சம்பவம்
சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய எலினா லாரெட் மீண்டும் மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எலினா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.