யாரும் தப்பிக்கமுடியாது.. போக்குவரத்து விதிமீறல்கள், ஒரே நாளில் ரூ.2.39 கோடி வசூல் - அதிகாரிகள் அதிரடி!

Tamil nadu Tamil Nadu Police
By Vinothini Nov 27, 2023 05:37 AM GMT
Report

போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் ரூ.2.11 கோடி வசூல் செய்துள்ளனர். 

சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பல்வேறு விதிமீறிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் பிரேக் லைட் எரியாத வாகனங்கள், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்கள்,

traffic police

உரிமங்களை தவறாக பயன்படுத்தியது, உரிமங்களின் விதிமீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டது.

முதல்வர் குறித்து அவதூறு கருத்து.. அது நான் இல்லை - முன்னாள் டிஜிபி விளக்கம்!

முதல்வர் குறித்து அவதூறு கருத்து.. அது நான் இல்லை - முன்னாள் டிஜிபி விளக்கம்!

வசூல்

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளன.

traffic police

பின்னர், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செலுத்தப்படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திடீர் சோதனைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும், என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.