அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது... போக்குவரத்து அதிகாரிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்தில் மாற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கழகம்
தமிழகம் முழுவதும் 8 கோட்டங்களாக அரசு போக்குவரத்துக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தனியாக தொலைதூர பஸ்களை இயக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களுக்கு கட்டணம் இல்லா பஸ்கள் பிங்க் நிறத்தில் இயக்கி வருகிறது.
மஞ்சள் நிற பஸ்கள்
இந்நிலையில், தமிழக அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திலும், நீல வண்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது, அதனால் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்கள், அடர் மற்றும் வெளிர் மஞ்சள், மெரூன் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் கூறுகையில், "நாகர்கோவில் மண்டலத்தில் 52 அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, திருச்சி, மதுரை, கரூர் போன்ற பகுதிகளில் பாடி கட்டும் பணிகள் நடைபெறுகிறது. பழைய பஸ்களுக்கு புதிதாக பாடி கட்டும் 96 பஸ்களில் மபசல் பஸ்கள் 52 பஸ்கள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட இருக்கிறது. தற்போது பாடி கட்டி வந்து சேர்ந்துள்ள 2 பஸ்களும் மஞ்சள் நிறத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளனர்.