தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சமா? - வெளியான ஷாக்கிங் புள்ளி விவரம்

By Irumporai Nov 17, 2022 03:54 AM GMT
Report

தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி அரசு வேலைக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள்.

35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள் , 268 பேர் மூன்றாம் பலினத்தவர் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சமா? - வெளியான ஷாக்கிங் புள்ளி விவரம் | Government Jobs Registering Employment Office

இதில் 18 வயத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம், 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம் , 31 முதல் 45 வயதுடையவர்கள்18.30 லட்சம்; 46 வயது முதல் 60 வயது உடையவர்கள்2.30 லட்சம்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது .

அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது,