முதல்வர் குறித்து அவதூறு கருத்து.. அது நான் இல்லை - முன்னாள் டிஜிபி விளக்கம்!

M K Stalin Tamil nadu DMK
By Vinothini Nov 26, 2023 09:10 AM GMT
Report

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து குறித்து டிஜிபி விளக்கமளித்துள்ளார்.

அவதூறு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து வாட்ஸ் ஆப்-ல் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான நடராஜ் மீது திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

dgp natraj

இது குறித்து நடராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர், "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டு நான் அதிா்ச்சியடைந்துள்ளேன். பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் நான் தீவிரமாக இயங்கவில்லை. மேலும், எந்த அதிகாரபூா்வ வாட்ஸ்அப் குழுவையும் நிா்வகிக்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய டிஜிபி - 7 பிரிவுகளில் வழக்கு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய டிஜிபி - 7 பிரிவுகளில் வழக்கு!

அறிக்கை

தொடர்ந்து, நான் கடந்த இரு ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து விலகி, ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குடிமைப் பணி தோ்வு எழுதும் இளைஞா்களுக்கு வழிகாட்டி வருகிறேன். எனது உடல்நிலையைக் கவனிக்க வேண்டிய நிா்ப்பந்தம் தற்போது உள்ளது. வாட்ஸ்அப்பிலும் தீவிரமாக இயங்கவில்லை.

dgp natraj

ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், நான் ஒருபோதும் போலியான செய்திகளைப் பரப்பவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீதான குற்றசாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். பொது மன்றத்தில், நான் எதையும் வெளியிடவில்லை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து நான் அவதூறு கூறியதாக வெளியிடப்பட்ட கருத்துக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. என் பெயா் எப்படி அதில் இழுக்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியலுக்கு அப்பால் தமிழக முதலமைச்சர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவருக்கு தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டது துரதிா்ஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.