முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய டிஜிபி - 7 பிரிவுகளில் வழக்கு!
முன்னாள் டிஜிபி முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு
முன்னாள் டிஜிபி நட்ராஜ் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ நடராஜ் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக புகார் எழுந்தது.
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்கின்றனர் என்றும் அவதூறு பரப்பிய டிஜிபி மீதும் வழக்கு பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
வழக்கு
இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவருமான ஆர்.நடராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் ஆர்.நடராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நட்ராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.