அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் - வைகோ கண்டனம்

Vaiko Government of Tamil Nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Oct 23, 2023 10:35 AM GMT
Report

அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்ததற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ கண்டனம்

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டிஜிபி சேலேந்திரபாபுவை நியமிக்கக் கோரி தமிழக அரசு செய்த பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதிகார முடிவு 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘’தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமாக சர்வாதிகார முடிவு;

தமிழக அரசு செய்கிற பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.பாஜக அரசின் ஏஜெண்டாக செயல்படுகிற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.