போக்குவரத்து காவலரை காரோடு இழுத்துச் சென்ற போதை ஆசாமி - பகீர் வீடியோ!
போக்குவரத்து காவலர் காரின் கதவில் தொங்கிய படியே சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன சோதனை
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காரை நிறுத்தி டிரைவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார்.
மேலும், அந்த டிரைவர் மதுபோதையில் இருந்ததையடுத்து போலீசார் அபராதம் விதிக்க முயண்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென டிரைவர் காரை இயக்கியதால்,
டிரைவர் கைது
போக்குவரத்து காவலர் காரின் கதவில் தொங்கிய படியே சிறிது தூரம் வரை இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் மதுகுடித்து விட்டு காரை ஓட்டியது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
VIDEO | #Haryana: A cab driver tried to flee when traffic police asked for the documents of the vehicle he was driving in Ballabgarh. He was nabbed by traffic cops after a short chase. The incident reportedly took place yesterday.
— Press Trust of India (@PTI_News) June 22, 2024
(Source: Third Party) pic.twitter.com/eJILVSsqMJ