அரங்கேறிய கொடூரம்...விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்- இரக்கமின்றி சாலையோரம் வீசிய டிரைவர்!
பஸ் மோதி படுகாயம் அடைந்த இளைஞரை டிரைவர், கிளீனர் சாலையோரம் வீசிச்சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
போராடிய இளைஞர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தின் அருகே அதிகாலை வேளையில் நின்று கொண்டு இருந்து இளைஞர் மீது அவ்வழியாக வந்து பஸ் மோதிவிட்டு சென்றது. அதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் பலியான வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தினர். அதோடு விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பஸ்சை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பஸ் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைஞர் மீது மோதியது
இரக்கமில்லா டிரைவர்
மட்டுமல்லாமல் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோர், இளைஞரை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பான டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
விபத்தில் சிக்கியவரை கண்டுக்காமல் கடந்து செல்வோரை பார்த்திருக்கலாம். ஆனால் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நிலையில், உள்ள ஒருவரை சாலையோரத்தில் தூக்கி வீசி சென்ற இரக்கம் இல்லா மனிதர்களை பார்க்கும் போது மனித நேயம் மாண்டதாக தான் தோன்றுகிறது.