ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சு வலி.. கண்ட்ரோல் இல்லாமல் கவிழ்ந்த பேருந்து - 8 பேர் படுகாயம்!

Accident Salem
By Vinothini Oct 28, 2023 07:03 AM GMT
Report

டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பஸ் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பேருந்து

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் இன்று காலையில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இதனை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா என்ற 33 வயதான நபர் ஒட்டி வந்தார்.

vazhapadi-near-bus-accident-8-were-injured

அப்பொழுது வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீச்சு - ஆதாரத்துடன் விளக்கிய காவல்துறை!

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீச்சு - ஆதாரத்துடன் விளக்கிய காவல்துறை!

விபத்து

இந்நிலையில், அந்த பஸ்ஸில் உள்ள பயணிகள் சிக்கி அலறினர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அங்கு ஓடி வந்து கண்ணாடியை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.

vazhapadi-near-bus-accident-8-were-injured

மேலும், டிரைவர் உள்பட 19 பேரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.