கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீச்சு - ஆதாரத்துடன் விளக்கிய காவல்துறை!

Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Vinothini Oct 27, 2023 01:45 PM GMT
Report

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசியது குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

குண்டுவீச்சு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா' வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் கூறப்பட்டது.

police-explained-petrol-bomb-on-governor-bungalow

இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அதில் ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வந்தது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - பரபரப்பு!

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் - பரபரப்பு!

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் பேசுகையில், "கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கமான குற்றவாளி. தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது.

police-explained-petrol-bomb-on-governor-bungalow

ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை. தான் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட 4 பாட்டில்களில் இரண்டு பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் எதிர்புறத்தில் இருந்து எரிய முற்பட்டபோது அவை ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள பேரிகேட் அருகே விழுந்தன.

மாறாக, ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை. குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை. வினோத் தனியாகதான் வந்துள்ளார்.

அவருடன் யாரும் வரவில்லை. சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று விளக்கமளித்துள்ளார்.