ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி.. பின்னணியில் திமுக? - சாடிய அண்ணாமலை!

DMK BJP R. N. Ravi K. Annamalai
By Vinothini Oct 25, 2023 01:30 PM GMT
Report

கவர்னர் மாளிகை முன்பு குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் குண்டு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இன்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த குண்டை வீசியது பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்று தெரியவந்துள்ளது.

petrol bomb blast infront of governor house

இது குறித்து கிண்டி போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இவர் ஏற்கெனவே பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியந்தது.

மேலும், அவர் ஓராண்டாக சிறையில் இருந்ததாகவும், தனது விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரை பற்றி பேச திமுகவிற்கு அறுகதையே இல்ல.. மன வலியோடு பார்த்துவிட்டு வந்தேன் - அண்ணாமலை பேட்டி!

அவரை பற்றி பேச திமுகவிற்கு அறுகதையே இல்ல.. மன வலியோடு பார்த்துவிட்டு வந்தேன் - அண்ணாமலை பேட்டி!

அண்ணாமலை

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமை அலுவலகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள், திமுக அரசுதான் இந்தத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்து திசை திருப்புவதற்கு தயாராகி வருகிறார்" என்று தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.