அவரை பற்றி பேச திமுகவிற்கு அறுகதையே இல்ல.. மன வலியோடு பார்த்துவிட்டு வந்தேன் - அண்ணாமலை பேட்டி!
பாஜக தலைவர் அண்ணாமலை திமுக குறித்து பேசியுள்ளார்.
அண்ணாமலை
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அதில், "நல்ல தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு மாற்றியவர்கள் திமுக அரசு மாற்றி வைத்துள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் அதிகரித்துள்ளன.
பாரதியைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. 1970, 80 காலகட்டங்களில் பாரதியை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் மனதில் இருந்து பாரதியை அழிக்க முடியவில்லை எனத் தெரிந்த பிறகு, அவரது இல்லத்தை அரசுடைமையாக்கினார்.
வாரணாசியில் பாரதியார் நான்கு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். மன வலியோடு சென்று அந்த இடத்தை நான் பார்த்து விட்டு வந்தேன்" என்றார்.
நீட் நாடகம்
இதனை தொடர்ந்து, "நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுகிறது. நீட் தேர்வை தமிழகத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். 50 லட்சம் கையெழுத்து கூட வாங்க முடியவில்லை என்றால் எதற்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
டி ஆர் பாலு அறிக்கையில் கவர்னரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார். தமிழர் ஒருவரை பிரதமராக நிறுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்க வேண்டும்" எண்டன்று பேசியுள்ளார்.