பிரதமர் வேட்பாளராக அண்ணாமலை.. ஆதரவளிக்க நான் தயார் - சீமான் பரபரப்பு பேட்டி!

BJP K. Annamalai Seeman
By Vinothini Oct 24, 2023 12:06 PM GMT
Report

சீமான் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசியுள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து, "திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் நீட் தேர்வை கொண்டுவந்ததாக குற்றம்சாட்டினார்.

seeman-about-pm-election-candidate

நாட்டிலுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தேர்வு இருக்கிறது ஆனால் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு எந்த வித தேர்வும் இல்லை என்று தெரிவித்தார். தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே நிர்மலா சீதாராமன் இரண்டு முறை அமைச்சராக பதவியில் நீடித்து வருகிறார். இதில் என்ன நேர்மை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

TNPSC தலைவர் தேர்வு.. வெளிப்படைத்தன்மை இல்லை, சைலேந்திர பாபுவை ரிஜெக்ட் செய்த கவர்னர்!

TNPSC தலைவர் தேர்வு.. வெளிப்படைத்தன்மை இல்லை, சைலேந்திர பாபுவை ரிஜெக்ட் செய்த கவர்னர்!

சீமான் ஆதரவு

இதனை தொடர்ந்து, கூட்டணிக்காக பல கட்சிகள் தங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆனால் தாங்கள் எப்போதும் தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார். மோடி, மோடி என்று பூச்சாண்டி காட்டிதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. "பாஜக காங்கிரஸ் கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடாது.

seeman

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்களில் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு, நாங்களே அவர்களை ஆதரிப்போம்" என்று கூறியுள்ளார்.