நாம் தமிழர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர்கள்தான் - அதிரடியாக அறிவித்த சீமான்!
எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுகவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த சீமான் "நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம், கூட்டணிக்கு அழைப்பார்கள். இன்னும் நாள் உள்ளது பிறகு தான் பேசவேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர் "வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனது கட்சியில் பிரதமர் வேட்பளார் இல்லையா என கேட்கிறார்கள், எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர்" என்று தெரிவித்தார்.