அதிமுக பாஜக கட்சிகளுக்கிடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!!
அதிமுக பாஜக பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!! பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவா..?
சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என கூறிய நிலையில், அது தொடர்பாக பாஜக என்ன முடிவெடுக்கும் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக இடையே பிரச்சனை இல்லை என கூறி, தன்னை பொறுத்தமட்டில் பிரதமராக மோடி வரவேண்டும் என்பவர்கள் கூட்டணியில் வருவார்கள் என கூறினார். மேலும் அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கு தான் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தன்மானமே முக்கியம்
ஆனால், தனக்கு யாருடனும் பிரச்சனை இல்லை என கூறி, யாரையும் தான் தவறாக பேசவில்லை என தெரிவித்தார். மேலும் தனது அரசியலில் தான் தெளிவாக இருப்பதாக கூறி, தன்மானமே தனக்குமுக்கியம் என தெளிவுபடுத்தினார். எங்கேயும் தான் அண்ணாதுரை குறித்து தவறாக பேசியதில்லை என சுட்டிக்காட்டி, கூட்டணி பற்றி அதிமுகவின் கருத்திற்கு தான் பதிலளிக்க முடியாது என தெரிவித்தார்.
மதுக்கடைகளை அண்ணா வேண்டாமென கூறிய நிலையில், கருணாநிதி தான் மதுக்கடைகளை திறக்க கையெழுத்திடார் என தெரிவித்து அண்ணாமலை, தமிழகத்தில் இபிஸ் முதல்வராக வரவேண்டும் என தான் கூற முடியாது என்றும் கூறினார்.
அண்ணாவை பற்றி தவறாக பேசவில்லை
ஆனால் பேசியதற்கு தான் மன்னிப்போ, கருத்தில் இருந்து பின்வாங்க போவதோ இல்லை என திட்டவட்டமாக கூறி, அண்ணா பற்றி தவறாக கூறவில்லை என்றும் நடந்ததை நடந்தவாறே தான் கூறுகிறேன் என விளக்கமளித்தார்.
மேலும், தான் மேற்கொள்க்காட்டிய இந்து செய்தித்தாளின் விளக்கத்தை தான் ஏற்கமாட்டேன் என கூறிய அண்ணாமலை, மீண்டும் தெளிவாக மோடி பிரதமராக வரவேண்டும் என கூறும் கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் நிச்சயமாக வரும் என்றும் அவர் கூறினார். மேலும் சனாதன தர்மமே தங்களின் உயிர் மூச்சு என குறிப்பிட்டு, அதனை கடைசி வரை தான் தெரிவிப்பேன் என விளக்கமளித்தார்.