நம்பிச் சென்ற கணவன்; வெளியில் அரை நிர்வாணமாக ஓடிய மனைவி - சீரழித்த நபர்கள்!
திருமணமான பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவருடன் வேலை தேடி உஜ்ஜைனி வந்துள்ளார். அப்போது ரவி என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்கள் இருவரையும் தாஜ்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அறிந்த இம்ரான் என்பவரும் அங்கு வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதாகக் கூறி அந்த பெண்ணின் கணவரை ரவி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இம்ரான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இருவர் கைது
இதனிடையே அவரது கணவரை கடையிலேயே அமரவைத்து ரவி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதிலிருந்து தப்பித்த அந்த பெண் வெளியே சுமார் ஒன்றரை கி.மீ தூரம் அரை நிர்வாணமாக ஓடியுள்ளார்.
அப்போது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு ஆடை கொடுத்து உதவியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பன்வாசா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ரவி மற்றும் இம்ரானை கைது செய்துள்ளனர்.