வரலாறு காணாத மாற்றம்; தனுஷ்கோடியில் ஆச்சர்யம் - சுற்றுலா பயணிகளுக்குத் தடை!

Tamil nadu Tourism Ramanathapuram
By Sumathi Apr 02, 2024 05:24 AM GMT
Report

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட புயலின் காரணமாக இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதில், 1000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுற்றுலா பயணிகள் புயலில் சிக்கி பலியாகினர்.

dhanushkodi

அதன்பின் மிஞ்சிய இடங்களான பால் நிலையம், விநாயகர் கோவில், தேவாலயம், ரயில் நிலையம் ஆகியவற்றினை சுற்றுலா பயணிகள் தினமும் வந்து கண்டு களிக்கின்றனர்.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி உலக சாதனை படைத்த இந்திய பெண்!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி உலக சாதனை படைத்த இந்திய பெண்!

பயணிகளுக்கு தடை

இந்நிலையில், முகுந்தராயன் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை 30 அடிக்கு மேல் கடல் அலைகள் தடுப்புகளை தாண்டி எழுவதால் தடுப்புகளை பெயரத்து கடல் நீர் சாலைகளில் விழுகிறது. தடுப்புகளில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் கிடைப்பதால் வாகனங்கள் இயக்க முடியாது சூழல் நிலவியுள்ளது.

வரலாறு காணாத மாற்றம்; தனுஷ்கோடியில் ஆச்சர்யம் - சுற்றுலா பயணிகளுக்குத் தடை! | Tourists Are Not Allowed To Dhanushkodi

மேலும், அங்குள்ள மீனவ குடியிருப்புகள் மற்றும் உணவக கடைகளுக்கு கடல் நீர் புகுந்ததால் தவிப்பில் உள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.