சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு கடல் அரிப்பால் தென்பட்ட தனுஷ்கோடி சாலை பாலம் - வைரலாகும் புகைப்படம்

By Nandhini May 23, 2022 07:13 AM GMT
Report

இந்தியாவின் தென்கோடி எல்லை பகுதியாக இருந்ததுதான் தனுஷ்கோடி. ஒரு காலத்தில் முக்கிய துறைமுகமாக தனுஷ்கோடி விளங்கியது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமான வியாபாரத் தொடர்பாக நகரமேமாக இருந்தது.

இந்தியாவை இலங்கையோடு இணைக்கும் ரயில் நிலையமாகவும் தனுஷ்கோடி இருந்தது. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அதிகாலையில் கடும் புயல் தனுஷ்கோடியை தாக்கியது.

இந்தப் புயலால் தனு‌‌ஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்தது. அதிகாலையில் நடந்த இந்த புயலின் கோர தாண்டவத்தில் 2000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இந்த புயலில் எம்.ஆர்.சத்திரம்-தனு‌‌ஷ்கோடி இடையே அமைக்கப்பட்டிருந்த சாலை பாலம் கடலில் அடித்து செல்லப்பட்டு கடல் நீரில் மூழ்கிப்போனது.

இதனையடுத்து, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அரசு அறிவித்தது. இதனையடுத்து, புயலில் தப்பிய எஞ்சிய மக்கள் வேறு, வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வாழ ஆரம்பித்தனர். இந்நிலையில், சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கடல் அரிப்பால், கடலில் மூழ்கிப்போன சாலை பாலம் வெளியே தெரிந்துள்ளது.இதனை சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படத்தை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு கடல் அரிப்பால் தென்பட்ட தனுஷ்கோடி சாலை பாலம் - வைரலாகும் புகைப்படம் | Dhanushkodi