கொண்டைஊசி வளைவில் தடுமாற்றம்.. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து - 9 பேர் பலி!
சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுததில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பேருந்து
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தற்போது தொடர் அரசு விடுன்முறையால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்பொழுது தென்காசியிலிருந்து தனியார் பேருந்தில் ஊட்டிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 54 பேர், சுற்றிப் பார்த்து விட்டு குன்னூர் மலைப்பகுதியில் நேற்று மாலை சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது 9 -வது கொண்டை ஊசி வளைவைக் கடக்கும்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. அந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கத்தி அலறியுள்ளனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த வழியாக சென்ற சிலர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து உடனே வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணியை துவங்கினர். இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர், அவர்களை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர், மேலும், இதில் 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.