அதிகாரிகளின் அலட்சியம்.. வேகத்தடையால் பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்!
கோவையில் வேகத்தடையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 12 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது கொடிசியா அருகே கீதாஞ்சலி பள்ளி பக்கத்தில் இவரது இரு சக்கர வாகனம் வந்த பொழுது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நள்ளிரவில் உல்லாசத்திற்கு அழைத்த டிரைவர்.. மறுத்ததால் டார்ச்சர், அடித்தே கொன்ற திருநங்கை - அதிர்ச்சி!
வேகத்தடை
இந்நிலையில், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கான குறியீடுகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் அங்கு இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் போனது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, இரவில் காவல்துறையினர் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை பெயின்ட்டில் அடித்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த செய்திகள் வெளியானதும் போலீசார் அந்த வேகத்தடையை நீக்கினர். மேலும், அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றுவதற்காக போலீஸர், இவ்வாறு செய்ததாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.