மேஜிக் நோட்டை தொட்டால் கொட்டும் பணம்; முகநூலில் நூதன மோசடி - மக்களே உஷார்!

Tamil nadu Chennai
By Jiyath May 24, 2024 04:38 AM GMT
Report

நபர் ஒருவர் முகநூலில் வந்த லிங்கை கிளிக் செய்து பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முகநூல் மோசடி 

சென்னை ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவரது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தோடு "500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டு வெற்றி பெறுங்கள். ரூ.5,000 கேஷ் பேக் பெறுங்கள்" என்ற வாசகத்துடன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேஜிக் நோட்டை தொட்டால் கொட்டும் பணம்; முகநூலில் நூதன மோசடி - மக்களே உஷார்! | Touch The Magic Rs 500 Facebook Scam In Chennai

அதில் இருந்த லிங்கை வினோத் கிளிக் செய்தபோது அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், உங்களது வங்கி கணக்கில் ரூ.5,000 வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு முத்தத்தால் வந்த பிரச்சனை; ரணகளமான மணமேடை - அதிர்ச்சி சம்பவம்!

ஒரு முத்தத்தால் வந்த பிரச்சனை; ரணகளமான மணமேடை - அதிர்ச்சி சம்பவம்!

போலீசார் விசாரணை 

இதனால் மகிழ்ச்சியடைந்த வினோத் தனது 'ஜி பேயில்' வங்கி கணக்கு இருப்பை சரி பார்த்தார். அப்போது அதில் இருந்த தனது மனைவியின் சம்பள பணமான ரூ.4,650 எடுக்கப்பட்டு, வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது.

மேஜிக் நோட்டை தொட்டால் கொட்டும் பணம்; முகநூலில் நூதன மோசடி - மக்களே உஷார்! | Touch The Magic Rs 500 Facebook Scam In Chennai

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த நூதன மோசடி குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோசடி கும்பல் முதலமைச்சர் புகைப்படத்துடன் 'லிங்கை' அனுப்பி பணத்தை சுருட்டியது தெரியவந்துள்ளது.