ஒரு முத்தத்தால் வந்த பிரச்சனை; ரணகளமான மணமேடை - அதிர்ச்சி சம்பவம்!
மணமகளுக்கு மணமகன் முத்தம் கொடுத்ததால் இரு வீட்டாரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் என்ற வாலிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மணப்பெண்ணுக்கு அவர் மாலை மாற்றினார். இதனையடுத்து மணமகனும்-மணமகளும் முத்தம் கொடுத்துக்கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மணமேடையில் ஏறி பெண்ணுக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கர்லால், மணப்பெண்தான் முத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டார் என கூறினார்.
தகராறு
இருப்பினும், அதை கேட்காத மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரைத் தாக்கினர். பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், மணப்பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் 2 குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். இறுதியில் திருமணம் ரத்து செய்யப்படுவதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.