'வில்லேஜ் ஃபுட் பேக்டரி' முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள் - அதிர்ந்த ஃபாலோவர்ஸ்!

Facebook Tamil nadu
By Jiyath Mar 06, 2024 08:20 AM GMT
Report

வில்லேஜ் ஃபுட் பேக்டரி முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபாசப் படங்கள் பகிரப்பட்டு வருகிறது

முகநூல் பக்கம் ஹேக் 

தேனி மாவட்டத்தை சேர்ந்த டாடி ஆறுமுகம் என்பவர் நடத்தி வரும் வில்லேஜ் ஃபுட் பேக்டரி (Village Food Factory) என்ற சமையல் யூடியூப் சேனல் மிகவும் பிரபலம். தனது எதார்த்த பேச்சு மற்றும் சமையல் மூலம் தனி ரசிகர்க கூட்டத்தையே ஆறுமுகம் உருவாக்கி உள்ளார்.

இந்த சேனலுக்கு சுமார் 4.75 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். அதேபோல் இவரது முகநூல் பக்கத்தை 53 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபாசப் படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

விளக்கம் 

இதனால் இந்த பக்கத்தை பின்தொடர்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள வில்லேஜ் ஃபுட் பேக்டரி தரப்பு "யாரோ சிலர் அருவருக்கத்தக்க புகைப்படங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறார்கள்.

எத்தனை முறை அதை நீக்கினாலும் மீண்டும் ஸ்டோரியாக பதிவிடப்படுகிறது. முகநூல் நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும், நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.