தக்காளிகளுக்கு பதற்றத்துடன் காவல் இருந்த உ.பி. போலீஸ் -நள்ளிரவில் நடந்த சம்பவம்!
லக்னோவில் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துகளானது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 18 டன் தக்காளியை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பெங்களூருவிலிருந்து புதுடில்லிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகத்தில் லாரி சென்று கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே நின்றுள்ளது.
இதைக் கண்ட லாரி ஓட்டுநர், மாடு மீது மோதாமல் இருக்க லாரியை திசை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி 18 டன் தக்காளியுடன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளிகள் அனைத்தும் அப்படியே சாலையில் சிதறியது.
கிட்டத்தட்ட 18 டன் தக்காளிகளும் சாலையில் சிதறிக் கிடந்தது .இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அப்போது சாலை எங்குப் பார்த்தாலும் தக்காளியாக இருந்தது.
விபத்து
இரவு என்பதால் என்ன செய்வது என்று காவல்துறையினர் யோசித்துள்ளனர். இவ்வளவு தக்காளிகளைச் சேகரிப்பது விடிவதற்குள் இயலாத காரியம் என்பதால் அங்கேயே காவல் காக்க ஆரம்பித்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த லாரி க்ளீனர், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் என இரண்டு பேரையும் காவல்துறை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.