இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி..காட்டுக்குள் கொடூரம் - 2 சிறார்கள் உட்பட மூவர் கைது!

Tamil nadu Chennai Sexual harassment
By Swetha Sep 23, 2024 10:24 AM GMT
Report

பள்ளி மாணவியை மூவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி..

சென்னை அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர் அந்த 16 வயது மாணவி. அவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி..காட்டுக்குள் கொடூரம் - 2 சிறார்கள் உட்பட மூவர் கைது! | Girl Was Raped By 3 Including 2 Minors Is Arrested

அதே ஊரை சேர்ந்த உறவினர்களாக 2 சிறார்கள் உள்பட திருமணமான சுந்தர்(23) என்பவர் உள்ளிட்ட 3 பேர் பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியை தூக்கி சென்று காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்த கொழுந்தன் - சுடுகாட்டில் நடந்த கொடூரம்!

அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்த கொழுந்தன் - சுடுகாட்டில் நடந்த கொடூரம்!

மூவர் கைது

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விடு திரும்பிய மாணவி தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பதிப்பை சொல்லியிருக்கிறார். இதை தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி..காட்டுக்குள் கொடூரம் - 2 சிறார்கள் உட்பட மூவர் கைது! | Girl Was Raped By 3 Including 2 Minors Is Arrested

மேலும், மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சமயத்தில் குற்றவாளிகளை போலிசார் தேடி வந்த நிலையில், அவர்கள் மூவரும் காட்டில் மறைந்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பிறகு புழல் சிறைக்கும் அனுப்பிவைத்தனர்.