அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்த கொழுந்தன் - சுடுகாட்டில் நடந்த கொடூரம்!
அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்து கொழுந்தன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 28 வயதான திருமணமான பெண். கணவன் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர் தாயார் வீட்டிலும் கணவர் வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு தாழக்குடி பகுதியில் ஒரு சுடுகாட்டில் ஆடைகள் கலைந்த நிலையில் படுகாயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சுடுகாட்டில்..
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது அந்த பெண்ணை கொன்றது கொழுந்தன் என்பது தெரியவந்தது. அவரை உடனே கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
நகைக்காக அண்ணியை இரும்பு கம்பியால் தாக்கியது மட்டுமல்லாமல் மயக்க நிலையில் இருந்த அவரை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு உடலை ஒரு சுடுகாட்டில் போட்டுவிட்டு நகையை எடுத்து தப்பித்து சென்றது தெரிய வந்தது.
இறுதியில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணியை கொலை குற்றத்திற்காக கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அவருக்கு அபராதமாக ரூ.3000 விதிக்கப்பட்டது.