உச்சம் தொட்ட தக்காளி, வெங்காயம் விலை; கிலோ இவ்வளவா? எப்போது குறையும்!
தக்காளி விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கோடை முடிந்து பருவமழை தொடங்கியுள்ளது.
தக்காளி
தொடர்ந்து, பலத்த காற்று மற்றும் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தக்காளி விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ. 100ஐ தொட்டுள்ளது. போடி பகுதியில் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ. 110 விற்பனையாகிறது.
விலை உயர்வு
வழக்கமாக விற்பனைக்கு வரும் தக்காளிகளைக் காட்டிலும் சுமார் 40% வரை வரத்து குறைந்துள்ளது. இதுமட்டுமன்றி ஒரு கிலோ ரூ.40ஐ தாண்டி விற்பனையாகும் நிலையில், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 தொட்டுள்ளது.
காய்கறி வரத்து அதிகரித்து மீண்டும் வழக்கமான நிலைக்கு வரும் வரை காய்கறி விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.