தக்காளி விலை ரூ.200-ஐ தொடும்; உச்சத்தில் சின்ன வெங்காயம் - இப்படியே போனா எப்படி?
இன்று தக்காளி விலை ரூ.20 வரை குறைந்து விற்பனையாகிறது.
தக்காளி விலை
இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தக்காளி விலை ரூ.20 குறைந்து கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உச்சத்தில் வெங்காயம்
இருப்பினும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்பனையாகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்டவை கிலோ ரூ.200க்கும், இஞ்சி கிலோ ரூ.220க்கும் விற்பனையாகிறது.
மேலும், தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் ரூ.200-ஐ தொடும் என விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.