தக்காளி விலை குறைந்து.. ராக்கெட் வேகத்தில் ஏறிய காய்கறி விலை - திகைப்பில் மக்கள்!
தக்காளியை தொடர்ந்து காய்கறி விலை அதிரடியாக எகிறியுள்ளது.
காய்கறி விலை
பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையிலேயே கிலோ 5 குறைந்து ரூ.90க்கு விற்கப்படுகிறது எனில், சில்லறை கடைகளில் விலை ரூ.120ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
உயர்வு
இந்நிலையில், காய்கறி விலையும் ஏறியுள்ளது. சின்ன வெங்காயம் விலை ரூ.80, பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.100 இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.200, பூண்டு விலை ரூ.18௦ பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.180, வண்ண குடமிளகாய் விலை ரூ.180க்கு விற்பனையாகிறது.
இதற்கிடையில், அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் என நுகர்வோர் நலத்துறை செயலாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.