மீண்டும் உச்சத்தில் தக்காளி விலை; பெட்ரோலுக்கே டஃப் - எப்போது குறையும்?

Tomato Chennai
By Sumathi Jul 01, 2023 03:46 AM GMT
Report

மீண்டும் தக்காளி விலை ரூ.120ஐ எட்டியுள்ளது.

தக்காளி விலை

பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் உச்சத்தில் தக்காளி விலை; பெட்ரோலுக்கே டஃப் - எப்போது குறையும்? | Tomatoes Are Selling At Rs 120 In Koyambedu

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையிலேயே கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது எனில், சில்லறை கடைகளில் விலை ரூ.150ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

உயர்வு

மேலும், வரும் வாரங்களில் இரண்டு முகூர்த்த தினங்கள் இருப்பதால் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், "ஆண்டின் 365 நாட்களிலும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.