பார்த்து யூஸ் பண்ணுங்க இனி..! விண்ணை தொட்ட தக்காளி விலை - ஒரு கிலோ 70 ரூபாய்..!
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விண்ணை முட்டும் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் வெளிமாநில தக்காளி வரவு 50 சதவீதம் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 85 லாரிகளில் 750 டன் தக்காளி வந்து சேரும்.
மேலும் அதிகரிக்க வாய்ப்பு
தற்போது அது 35 லாரிகளாக குறைந்துள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாகவே தக்காளி விலை திடீரென அதிகரித்துள்ளது.
தட்டுப்பாடு தொடர்ந்தால் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.