தக்காளி விலை கடும் வீழ்ச்சி...கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.6க்கு விற்பனை

Tomato Chennai
By Thahir May 01, 2023 06:35 AM GMT
Report

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது.

தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.அதன் கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது.

tomato-prices-fall-sharply-in-koyambedu

பின்னர் மேலும் விலை குறைந்து கடந்த வாரத்தில் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு, நேற்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது.

வரத்து அதிகரிப்பு 

நவீன் தக்காளி என்று கூறப்படும் பெங்களூரு தக்காளி மட்டும் ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விளைச்சல் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.

tomato-prices-fall-sharply-in-koyambedu

நாளொன்றுக்கு 110 டன்கள் வரத்தாக இருந்த தக்காளி தற்போது 1400 டன் முதல் 1500 டன்னாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.