தக்காளி அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு ஆபத்து இருக்கா...? அறிந்து கொள்வோம்...

Tomato Tomato
By Nandhini 1 மாதம் முன்

தக்காளி அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். 

தக்காளி

தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருளாகும். தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன.

தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். தக்காளியில், 'விட்டமின் இ, சி, ஏ, தையமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம்' ஆகிய எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வார்கள். ஆனால், தக்காளி அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ இந்த கட்டுரையில் பார்ப்போம் -

tomato - life style - health

இருமல், தும்மல், தொண்டை

அடிக்கடி தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.

சருமம்

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், தக்காளியில் உள்ள லைகோபென் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

சிறுநீர்ப்பை

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், தக்காளியில் உள்ள ஆசிட் சிறுநீர்ப்பையில் தொற்றை ஏற்படுத்தி விடும்.

எலும்புகளில் தேய்மானம்

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது. இவை உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாக்கிவிடும்.

தலைவலி பிரச்சனை

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனையை உண்டாக்கும். எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

சிறுநீரக கற்கள்

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், நமது சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்ஸலேட் அதிகளவு படிந்து விடும். இதனால், சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாகிவிடும்.

வயிற்றில் அதிக கேஸ்

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், தக்காளியில் உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸை உண்டாக்கி ஜீரண சக்தியை குறைத்துவிடும்.