குட் நியூஸ்... ஏறிய வேகத்தில் இறங்கும் தக்காளி விலை - எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென அதிகரித்தது தற்பொழுது சரிந்து கொண்டே வருகிறது.
தக்காளி இறக்குமதி
தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை பயங்கரமாக உயர்ந்தது. இது சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதுவே சில்லறை வியாபார கடைகளில் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்கும் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், தற்பொழுது கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது, 550 டன் தக்காளி வந்து இறங்கியுள்ளது. அதனால் தற்பொழுது கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.80-க்கு விரோசனை செய்யப்படுகிறது.
மொத்த விற்பனை கடைகளில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிகபட்சம் 100 ரூபாய் விலையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிடைக்கும். பல நாட்களுக்கு பிறகு தக்காளி ரூ. 100 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.