திகிலூட்டும் வெங்காயம், தக்காளி விலை - ஆனால், அசத்தல் அறிவிப்பு!
வெங்காயம், தக்காளி விலை உயர்வால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
காய்கறி விலை உயர்வு
வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி அந்த மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும், அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக 50 முதல் 60 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து 30 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தக்காளி விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
பசுமை அங்காடி
கூடவே சமீபமாக வெங்காயம் விலையும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மொத்த விலையில் வெங்காயம் கிலோ ரூ.55 வரையிலும், தக்காளில் ரூ.90 வரையிலும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி பண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.40க்கும், தக்காளி கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.