மீண்டும் உயர்ந்த வெங்காயம், தக்காளி விலை - இன்றைய நிலவரம்?
தமிழகத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதில் தற்பொழுது வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 105 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.