அட கடவுளே பச்ச குழந்தையாச்சே...மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரத்தாய் - மூவர் கைது!

Kerala Death
By Swetha May 04, 2024 05:25 AM GMT
Report

பச்சிளம் குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த குழந்தையின் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்ச குழந்தை 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பனம்பள்ளி வித்யா நகரில் துப்புரவு பணியாளர்கள் ஒருவர் அங்கு பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதனை திறந்து பார்த்த்போது அதற்குள் பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்ததுள்ளது.

அட கடவுளே பச்ச குழந்தையாச்சே...மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரத்தாய் - மூவர் கைது! | Toddler Killed By Being Thrown From The Floor

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், உடனே போலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை இருந்த அந்த பிளாஸ்டிக் கவர் அருகில் அடுக்குமாடி குடியிருப்பின் முகவரி இருந்தது. அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குழந்தையை சாலையில் வீசியது தெரியவந்தது.

இதனால் தான் குழந்தை இறந்தது - அரசு மருத்துவமனை விளக்கம்

இதனால் தான் குழந்தை இறந்தது - அரசு மருத்துவமனை விளக்கம்

கொடூரத்தாய் 

இதை தொடர்ந்து போலிசார் அந்த குடியிருப்புக்குள் சென்று சோதனை நடத்தினர். அங்கு ரு வீட்டின் கழிவறையில் ரத்தக்கரை இருப்பதை கண்டறிந்தனர். பிறகு அந்த வீட்டில் இருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 20 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும்,

அட கடவுளே பச்ச குழந்தையாச்சே...மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரத்தாய் - மூவர் கைது! | Toddler Killed By Being Thrown From The Floor

பெற்றோர், தங்களது மகள் கர்ப்பமடைந்ததை வெளியே தெரியாமல் மறைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணின் பெற்றோர்கள் குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பாததால் ஒரு கவரில் வைத்து ஐந்தாவது மாடியில் இருந்து கீழே வீசி எரிந்துள்ளனர். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. அதைத்தொடர்ந்து இளம்பெண், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.