இதனால் தான் குழந்தை இறந்தது - அரசு மருத்துவமனை விளக்கம்
கை அகற்றப்பட்ட குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தெரிவித்துள்ளது.
குழந்தை உயிரிழப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதல் பிரச்சனை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனைக்கு மாற்றப்பட்டது.
இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2ம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். தொடர்ந்து மருத்துமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் குழந்தை இன்று காலை உயிரிழந்தது.
மருத்துவமனை விளக்கம்
குழந்தையின் இறப்பிற்கான காரணத்தை தற்போது எழும்பூர் குழந்தைகளை நல மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதன்படி, பாக்டீரியா தொற்றினால், ரத்தத்தில் நச்சுக்கள் கலந்து, குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.