ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தங்கம் விலை
2024 ஆண்டில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் ஜனவரி மாதத்தில் ரூ 60 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,060க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலவரம்
இந்த நிலையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.