வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்த தங்கம் விலை..எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தங்கம் விலை
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆபரணத்தங்கத்தின் விலை வந்த நிலையில், பிப்.10 -ஆம் தேதி முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையைத் தாண்டி விற்பனையானது.
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது.
நிலவரம்
அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து தங்கத்தில் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.