புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை - 1 சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் விலை
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கத்தில் விலை ரூரூ.56 ஆயிரத்தில் இருந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை தங்கம் விலை காணப்பட்டது.
மேலும் எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து செல்லும் என்ற அச்சம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 க்கு விற்பனையானது.
உயர்வு
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்குவிற்பனை செய்யப்படுகிறது.