உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்!

Relationship World
By Swetha Jul 24, 2024 11:24 AM GMT
Report

பார்த்தவுடன் பிடிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய உடல்மொழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிடிக்க வேண்டுமா? 

ஒருவர் பிறர் கண்களுக்கு அழகானவராகவும், தெளிவனவராகவும், தைரியமானவராகவும் தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்கு நாம் மனதை எந்த அளவிற்கு தயார் படுத்திகிறோமோ, அதே அளவிற்கு உடல் மொழிகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

தைரியமான உடல் மொழி என்பது இந்த காலகட்டத்தில் மிக அவசியமானது. அதாவது, புதிய மனிதர்களை சந்திக்கையில், நேர்காணலுக்கு செல்கையில் போன்ற முக்கியமான சூழலில் தேவைப்படுவதுதான், நல்ல-தைரியமான உடல் மொழியாகும்.

மக்களே உஷார்..சின்ன கொசுவத்தியால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

மக்களே உஷார்..சின்ன கொசுவத்தியால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

உடல் மொழி

ஒரு சில நபர்கள் எந்த விதமான ஒப்பனைகளும் செய்யமாட்டார்கள் ஆனால் அவர்களை பார்த்தவுடன் ஏதோ ஒரு விஷயம் ஈர்க்கும்

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

அந்த வசீகரம் என்னவென்றால் அவர்களிடம் இருக்கும் தைரியமும், தனித்துவமான உடல் மொழியும்தான்.

மறைமுகத்தன்மை

உங்களை ஒருவர் முதன் முதலில் பார்க்கும் போது, அவர்களிடம் உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறி விட வேண்டாம். பிறர் உங்களை பற்றி போதுமான அளவு தெரிந்துகொண்டால் போதும்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

அப்போதுதான் உங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிக்கொண்டே இருக்கும்.

தோரணை

நாம் அமரும்/நின்று பேசும் தோரணையும் கூட, நம்மை குறித்த ஒரு பிம்பத்தை பிறர் மனதில் ஏற்படுத்தும்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

உட்காரும் போது அல்லது நிற்கும் போது நேரே நின்று, தலையை நிமிர்த்தி இருக்க வேண்டும்.

ஆடை

ஆள் பாதி ஆடை பாதி என்பது கேள்விப்பட்டிருக்கலாம். உன்மையில் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நமது ஆடைகளும் பிறருக்கு காண்பித்து கொடுக்கும்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

எனவே வெளியில் செல்கையில் உங்கள் ஆடையை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் அவசியம் இருக்க வேண்டும்.

பார்வை

நாம் தைரியமாக இருக்கிறோமா இல்லையா என்பதை ஒருவருடன் கண்ணுடன் கண் பார்த்து பேசுவதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

நம்மை தைரியமாக காண்பித்துக்கொள்ள எதிரில் இருக்கும் நபருடன் Eye Contact வைப்பது அவசியம்.

செவி கொடுத்து கேட்பது

உங்களுடன் ஒரு நபர் உரையாடலில் இருக்கும்போது, நீங்கள் மட்டுமே பேசாமல் அவர்கள் பேசுகையில் கேட்கவும் செய்யலாம்.

உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்! | To Make A Great First Impression Follow These Tips

அப்போது தான் எதிரில் இருப்பவர்களுக்கு நீங்கள் உண்மையாகவே அவர்களின் வாழ்க்கை குறித்து ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பது தெரியும்.