Friday, May 23, 2025

மக்களே உஷார்..சின்ன கொசுவத்தியால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

World
By Swetha 10 months ago
Report

கொசுவத்தியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்.

மக்களே உஷார்..

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் அதன் முக்கியப்பணி ஆகும். காற்றில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

மக்களே உஷார்..சின்ன கொசுவத்தியால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை! | Mosquito Coil Dangerous Smoke Causes Lung Damage

இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பாதிப்படையலாம். ஆனால், 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கின்றனர். இதற்கு 3 காரணங்கள் உள்ளது.

ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

நுரையீரல் பலம்பெற இதை கண்டிப்பாக செய்திடுங்கள்

நுரையீரல் பலம்பெற இதை கண்டிப்பாக செய்திடுங்கள்

மருத்துவர்கள் எச்சரிக்கை

அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்ற நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரங்கள் இருக்கின்றது.

மக்களே உஷார்..சின்ன கொசுவத்தியால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை! | Mosquito Coil Dangerous Smoke Causes Lung Damage

அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் மற்றும் கொசுவத்தியில் இருந்து வரும் புகையின் மூலமாகவும் நுரையீரல் பாதிக்கப்படும். ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம்.

கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.