அரசு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு கொட்டும் பணமழை - ரூ10000 பரிசு யாருக்கெல்லாம் தெரியுமா?
தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
தொலைதூர பேருந்து
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிர்த்து இதர நாள்களில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இதர நாள்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளில் 3 பேரை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கணினி குலுக்கல்
தற்போது இந்த திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஜூன் 2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ10,000 மும், இதர 10 பயணிகளுக்கு தலா ரூ2,000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
[]
ஜூன் 2024 மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம்(சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் நேற்று (0..07.2024) தேர்வு செய்தார்.