தமிழ்நாட்டில் வர உள்ள முதல் ஏசி பேருந்து நிலையம் - எங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் முதல் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து குத்தம்பாக்கத்தில் மற்றோரு பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. 2019 ம் ஆண்டே குத்தம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு 24.8 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடியில், கடந்த 2021 பிப்ரவரியில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
வசதிகள்
இங்கு புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்டின் கீழ்த்தளத்தில் 1500 க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 200 க்கு மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது. மேலும் லிப்ட், எஸ்கேலேட்டர், பணியாளர்களுக்கான ஓய்வறை, வைஃபை என அணைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இங்கிருந்து கோவை உட்பட மேற்கு மாவட்டங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வடிமைக்கப்ட்டு வருகிறது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் அரசு மும்முரம் காட்டியதால் இதற்கான பணிகள் தாமதம் ஆகியது. தற்போது ஜனவரிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு மார்ச் 2025 ல் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைந்துள்ள இடம்
இந்த குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கோயம்பேட்டிலிருந்து சரியாக 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரவாயிலைத் தாண்டி பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியும் ஈவிபி சினிமாஸூம் அமைந்திருக்கும். அதற்கு நேர் எதிரில் வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணைக்கோள் நகரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்தில்தான் இந்தப் பேருந்து முனையம் அமைந்திருக்கிறது.
குத்தம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பது குறித்தும் CMDA ஆய்வு செய்து வருகிறது. மேலும் பேருந்து முனையத்தை சுற்றி தண்ணீர் தேக்கமோ, போக்குவரத்துப் பிரச்னையோ ஏற்படக் கூடாது என்ற வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.