சாகடித்து விடுவேன்; வீரர்களை கடுமையாக கத்திய அஸ்வின் - என்ன நடந்தது?
திண்டுக்கல் பேட்ஸ்மேன்களை அஸ்வின் கடுமையாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
டிஎன்பிஎல் தொடர்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் எலிமினேட்டர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
அஸ்வின் செயல்
இதை அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கிடையில், 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டனர்.
இதில், கடுப்பான அஸ்வின் ஆடுகளத்திற்கு வெளியே Dug out-ல் அமர்ந்திருந்த போது திடீரென்று கோபமாகி கையை உயர்த்தி சாகடித்து விடுவேன் என்று திண்டுக்கல் பேட்ஸ்மேன்களை கடுமையாக திட்டினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.