6 வீரர்களையும் ரீடெய்ன் செய்ய அனுமதி; கொந்தளித்த காவ்யா மாறன் - பிசிசிஐ அதிர்ச்சி!

Cricket Kavya Maran
By Sumathi Aug 01, 2024 02:00 PM GMT
Report

6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதி தேவை என காவ்யா மாறன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் 

மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன்,

kavya maran

டெல்லி உரிமையாளர் கிரண் குமார், லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், ராஜஸ்தான் உரிமையாளர் மனோஜ், ஆர்சிபி உரிமையாளர் ப்ரத்மேஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேகேஆர் அணியின் ஷாரூக் கான், மும்பை அணி உரிமையாளர் அம்பானி வீடியோ மூலமாக கலந்து கொண்டனர். இந்நிலையில், காவ்யா மாறன் பேசிய கருத்துகள் வெளி வந்துள்ளன. அதில், 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அந்த வீரரை தான் நேரா போய் பார்த்தார் - தோனியை கூட சந்திக்கல காவ்யா மாறன்!

அந்த வீரரை தான் நேரா போய் பார்த்தார் - தோனியை கூட சந்திக்கல காவ்யா மாறன்!

கொதித்த காவ்யா மாறன்

அதிகளவிலான ஆர்டிஎம் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். அதனை 4 ரீடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் என்று பிரித்தும் கொடுக்கலாம். அல்லது மொத்தமாக 6 வீரர்களையும் ரீடெய்ன் செய்து கொள்ளவும் அனுமதிக்கலாம்.

6 வீரர்களையும் ரீடெய்ன் செய்ய அனுமதி; கொந்தளித்த காவ்யா மாறன் - பிசிசிஐ அதிர்ச்சி! | Kavya Maran Wants To Retain 6 Players Bcci

ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அப்படி ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுக்கும் போது, வீரர் தனது மார்க்கெட் ஊதியத்தை பெற முடியும். ஒருவேளை ஆர்டிஎம் இல்லாமல் தக்க வைக்க மட்டுமே அனுமதி கொடுத்தால், அவர்களுக்கு சில மற்ற ஒப்பந்தங்கள் மூலமாக ஊதியத்தை அளிக்க முடியும்.

அதேபோல் ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்துவதும் பர்ஸ் தொகை அளவினை வைத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். சிலர் தங்களின் பேங்க் பேலன்ஸை வைத்து ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்த கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் மெகா ஏலமே தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.